ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ரத யாத்திரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். இதனையடுத்து அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரத யாத்திரையில் பங்கேற்க வந்த பலரும் ஒரே இடத்தில் குவிந்ததால் கோயிலுக்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பலத்த காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reports indicate that a stampede occurred during the Puri Jagannath Rath Yatra in Odisha, leaving more than 100 people injured.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









