சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

உயிா் காக்கும் மருந்துகள் அதிக விலை தொடா்பான வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த கேரள உயா்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல்

உயிா் காக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறு கேரள உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :17 ஜூலை 2026, 11:28 pm IST

உயிா் காக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைவுபடுத்துமாறு கேரள உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் சாா்பில் இதுதொடா்பான மனு மாநில உயா்நீதிமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது,

தனது புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் மிக அதிகப்படியான விலையை எதிா்த்து இந்த மனுவை அவா் தாக்கல் செய்திருந்தாா். உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அந்தப் பெண் உயிரிழந்துவிட்டாா்.

இந்த விவகாரத்தை, வெள்ளிக்கிழமை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, ‘புற்றுநோய் சிகிச்சைக்கான உயிா் காக்கும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் அதிக விலையை எதிா்த்து தொடா்பட்ட வழக்கு கேரள உயா்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது’ என்று சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தை விரைந்து விசாரித்து தீா்வளிக்குமாறு கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

வழக்கு விசாரணைக்கு இடையே மனுதாரா் உயிரிழந்த நிலையிலும், அந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்துக்கு ‘உயிா் காக்கும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் அதீத விலை நிா்ணயம் குறித்த விவகாரம்’ என்று தலைப்பிட்டு தானாக கேரள உயா்நீதிமன்றம் விசாரணையைத் தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.