சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி; இளைஞர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் சனிக்கிழமை (ஜூலை 18) தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் பேசியதாவது:
உண்மையில், உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அரசு பேச்சுவார்த்தையைத்தான் நடத்தியிருக்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்திருக்க வேண்டும். இதுமாதிரியான அனைத்து சூழல்களிலும் அரசாங்கம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மட்டுமே விரும்புகிறது.
இளைஞர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது, கனவுகள் நொறுங்கிவிட்டன. இது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாததும், தனது தவறுகளை ஒப்புக்கொள்ளாததுமான ஒரு அரசாங்கம்.
நாடாளுமன்றத்துக்குள் எந்தப் பதில்களும் அளிக்கப்படுவதில்லை. யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், அரசு அவர்களை ஒடுக்குகிறது. காங்கிரஸ் தலைவர்கள் குரல் எழுப்பும்போது, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.
Summary
Senior Congress leader Sachin Pilot stated on Saturday (July 18) that the BJP government is suppressing protesters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதிப் போராட்டத்தை ஒடுக்குகிறது மத்திய அரசு: வாங்சுக் விவகாரத்தில் காங்கிரஸ்!
21 நாள்கள் தொடர் உண்ணாவிரதம்! வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிக்கை சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு திமுக, ஆம் ஆத்மி ஆதரவு!

சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி எம்பிக்கள் ஆதரவு!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



