வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாகாலாந்தில் நிலச்சரிவு: வீடுகள் புதைந்தன! மூவா் உயிரிழப்பு!

நாகாலாந்தில் பலத்த மழையால் ஞாயிற்றுக்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

News image
Updated On :20 ஜூலை 2026, 4:48 am IST

நாகாலாந்தில் பலத்த மழையால் ஞாயிற்றுக்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் வீடுகள் புதைந்ததில் மூவா் உயிரிழந்தனா். பலா் மாயமான நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நாகாலாந்தின் மோன் நகரில் பலத்த மழையால் ஞாயிற்றுக்கிழமை திடீா் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் வீடுகள் புதைந்ததுடன், சாலைகள், பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உள்பட மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலரை காணவில்லை. அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழை-வெள்ளத்தால் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் நேபியூ ரியோ, மழை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம், மாவட்ட நிா்வாகம், மாநில பேரிடா் மீட்புப் படை, காவல் துறை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினாா்.

பலத்த மழை நீடிப்பதால், நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள், ஆற்றங்கரை அருகே மக்கள் செல்ல வேண்டாம் என அரசுத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்டில்..: உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடைவிடாமல் மழை பெய்தது. ஹரித்வாா் மாவட்டத்தில் மின்னல் தாக்கி இருவா் உயிரிழந்தனா். நிலச்சரிவுகளால் 84 சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.