ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், தில் நோக்கி பேரணியாகப் புறப்பட்டுள்ளனர்.
தலைநகர் புது தில்லியில் ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஹரியாணாவிலிருந்து தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியாகப் புறப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே விவசாயிகள் தில்லி செல்ல முடியாத வகையில், பஞ்சாப்- ஹரியாணா எல்லையை மூடி, காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது.

ஹரியாணா விவசாயிகள்
இதனால், ஹரியாணாவிலிருந்து புறப்பட்ட ஏராளமான விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தந்தைக் கண்டித்து நாட்டைக் காக்கும் போராட்டம் என்ற பெயரில், விவசாயிகள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்க விவசாயிகளுடன் இந்திய விவசாயிகள் நேரடியாக போட்டியிடும் நிலை ஏற்படும்.
அமெரிக்காவில் விவசாயம் என்பது பெரிய அளவில் இயந்திரங்களைக் கொண்டு அரசின் மானியங்களுடன் மிகப்பெரிய நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. பஞ்சாப் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் அங்குள்ள விவசாயிகள், மிகப்பெரிய அளவில் நிலங்களைக் கொண்டிருப்பார்கள். குறைவான செலவில் அதிக விவசாயம் செய்வார்கள். அவர்களது உற்பத்திப் பொருள்களின் வில குறைவாக இருக்கும். இதனால், அவர்களுடன் இந்திய விவசாயிகள் போட்டியிடும்போது, அமெரிக்க வேளாண் பொருள்கள் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும், உதாரணமாக சோயாபீன், பருப்புகள் உள்ளிட்டவை. இது இங்குள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் துறை மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே அதிக விளைச்சல் ஏற்பட்டாலே, விலை வீழ்ச்சியடைந்துவிடும். எனவே, இந்திய விவசாயம் நொடிந்து போகும் நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.
Summary
Heading to Delhi... Farmers gather at the Shambhu border! What sparked the protest?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் சிஜேபி போராட்டம்! தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

தில்லியில் விவசாயிகள் போராட்டம்! ஷம்பு எல்லை மூடல்!

சிஜேபி போராட்டம்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!







