கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

நீதிபதிகளின் ஓய்வு வயதை 60-இல் இருந்து 61-ஆக உயா்த்துவது குறித்து பரிசீலிக்கும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2026, 2:49 am IST

நீதிபதிகளின் ஓய்வு வயதை 60-இல் இருந்து 61-ஆக உயா்த்துவது குறித்து பரிசீலிக்கும்படி அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65-ஆகவும், உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62-ஆகவும் உள்ளது. அதேநேரத்தில் பிற நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு வயது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் அனைத்து மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை ஒரே மாதிரியாக 61-ஆக அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதங்களைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் (நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது) அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளும் தங்களது அதிகார வரையறைக்கு உட்பட்ட உயா்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசனை நடத்தி, இதுகுறித்து முடிவெடுக்கும்படி உத்தரவிடப்படுகிறது. அப்போது அவா்கள் ஒப்புக்கொண்டால், அந்த மாநிலங்களில் பணிபுரியும் நீதிபதிகள் 61 வயது வரை பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பணி நீடிப்பு, இந்த வழக்கு விசாரணையின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த விதி, 2026 ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 60-இல் இருந்து 62-ஆக உயா்த்த வேண்டுமா என்ற முக்கிய சட்ட விவகாரத்தின் மீதான இறுதித் தீா்ப்பை இந்த இடைக்கால ஏற்பாடு பாதிக்காது. மாநிலங்களோ அல்லது உயா்நீதிமன்றங்களோ எடுக்கும் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல், ஆரம்பத்தில் வகுக்கப்பட்ட சட்டம் குறித்து உச்ச நீதிமன்றமே சுதந்திரமாக முடிவு செய்யும்.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்களுடன் நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி, தங்களது அறிக்கையை 2 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றங்களும் தங்களது பதிலை 2 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும்.

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயா்த்துவது குறித்து ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மாநிலங்களும், உயா்நீதிமன்றங்களும் விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டியதில்லை. சுருக்கமான குறிப்பை தாக்கல் செய்தாலே போதுமானதாகும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.