ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24) வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்! இன்று நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ்தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
/

சிஜேபி போராட்டத்துக்கு இடையில் புதிய உயர்கல்வி செயலர்! யார் இந்த நரேஷ் பால் கங்வார்?

மத்திய உயர்கல்வி துறையின் புதிய செயலாளர் நரேஷ் பால் கங்வார் பற்றி...

News image

நரேஷ் பால் கங்வார் - x

Updated On :24 ஜூலை 2026, 1:02 pm IST

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் சூழலில் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் வினீத் ஜோஷி வியாழக்கிழமை மாற்றப்பட்டார்.

மேலும், மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலராக இருந்த நரேஷ் பால் கங்வார், உயர்கல்வி துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பள்ளிக் கல்வித் துறைச் செயலராக டி.கே. அனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த நரேஷ் பால் கங்வார்?

மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்திருக்கும் சூழலில், புதிய செயலர் மாற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் கங்வார், ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

ஐஐடியில் இளநிலை மற்றும் முதிநிலை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தொடக்கத்தில் ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

கல்வித் துறை நிர்வாக அனுபவம்

2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், நீண்ட காலம் கல்வித்துறையில் பணியாற்றியுள்ளார். கல்விசார் கொள்கைகளை வகுப்பதிலும் அனுபவர் பெற்றவர்.

ராஜஸ்தான் அரசில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 2020-ல் மத்திய அரசுப் பணிக்கு நரேஷ் மாற்றப்பட்டார்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் இணைச் செயலாளராகவும், அதே துறையில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Summary

New Education Secretary amidst CJP protests! Who is Naresh Pal Gangwar?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.