
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா முதல் கட்டம் மட்டுமே! - மார்க்சிஸ்ட் கம்யூ.
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா முதல் கட்டம் மட்டுமே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம் ஏ பேபி பேச்சு...

பிரதமர் மோடியுடன் தர்மேந்திர பிரதான். - கோப்புப்படம்
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா முதல் கட்டம் மட்டுமே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ பேபி கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடு முழுவதும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி உள்ளிட்ட மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து, ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா முதல் கட்டம் மட்டுமே எனவும், தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம் ஏ பேபி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா முதல் கட்டம் மட்டுமே. மேலும், தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். மாணவ விரோத மற்றும் வணிக ரீதியான தேசிய கல்விக் கொள்கை திரும்ப பெறப்பட வேண்டும். போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். எங்கள் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போராட்டக்களத்தில் திடமாக நின்று வெற்றி பெற்ற அபிஜீத் தீப்கே, சோனம் வாங்சுக் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் எங்களின் வாழ்த்துகள்.
இந்த இயக்கத்துக்கு விளையாட்டு, சினிமா, கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் ஆதரவாகத் துணை நின்றதை எண்ணும்போது நெஞ்சம் நிறைகிறது.
நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்” எனக் கூறியுள்ளார்.
Summary
CPI(M) General Secretary M.A. Baby has pointed out that Dharmendra Pradhan's resignation is only the first step.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








