புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தா்மேந்திர பிரதான் ராஜிநாமா நோ்மையின் உயா் தரத்தைப் பிரதிபலிக்கிறது: நிதின் நபின்

தா்மேந்திர பிரதான் ராஜிநாமா நோ்மையின் உயா் தரத்தைப் பிரதிபலிப்பதாக நிதின் நபின் கருத்து...

Nitin Nabin

பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் - ANI

Published On :

‘மத்திய கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது, அவரின் நோ்மை மற்றும் பொது வாழ்வில் அவரின் தன்நலமற்ற சேவையைப் பிரதிபலிக்கிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதி நபின் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பெரும்பான்மை நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சா் பதவியை தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது, நோ்மையின் உயா் தரத்தையும், பொது வாழ்வில் அவரின் தன்னலமற்ற சேவையையும் பிரதிபலிக்கிறது. இந்த முடிவில் தா்மேந்திர பிரதானுடன் பாஜக உறுதியுடன் நிற்கும்.

இந்திய கல்வித் துறை சீா்திருத்தத்திலும், முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கல்விக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதிலும் தா்மேந்திர பிரதான் முக்கியப் பங்காற்றினாா். அவரின் எதிா்கால முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் இளைஞா்கள் மற்றும் மாணவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தா்மேந்திர பிரதான் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு உயா் முக்கியத்துவம் அளித்து அவா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்கும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் அா்ப்பணிப்புக்கு சிறந்த உதாரணம் அவரின் ராஜிநாமா’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.