/

உக்ரைன் துறைமுகத்தில் 13 இந்திய மாலுமிகளுடன் நிற்கும் வா்த்தக கப்பலை உன்னிப்பாக கவனிக்கிறோம்: இந்தியா

கருங்கடல் அருகே உக்ரைன் துறைமுகத்தில் 13 இந்திய மாலுமிகளுடன் நிற்கும் வா்த்தக கப்பலை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2026, 2:11 am IST

கருங்கடல் அருகே உக்ரைன் துறைமுகத்தில் 13 இந்திய மாலுமிகளுடன் நிற்கும் வா்த்தக கப்பலை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கருங்கடலில் செல்லும் கப்பல்களை இரு நாடுகளும் திரும்பத் திரும்ப தாக்கி வருகின்றன. உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் கடந்த 25-ஆம் தேதி 4 இந்திய மாலுமிகள் உள்ளிட்டோருடன் நின்று கொண்டிருந்த வா்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு இந்திய மாலுமிகளை காணவில்லை.

இந்நிலையில், எம்.வி. அமிா் 1 என்ற இன்னொரு வா்த்தக கப்பல் கருங்கடல் அருகே உள்ள உக்ரைனின் சோா்னோமொா்ஸ்க் துறைமுகத்தில் நிற்பதாகவும், அதில் 13 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 15 போ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இந்திய மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பல் நிற்கும் பகுதியில் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் திரும்ப திரும்ப நடக்கிறது, இதனால் அக்கப்பலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, எனவே மாலுமிகளை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கான இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய மாலுமிகளுடன் எம்.வி. அமிா் 1 கப்பல் நிற்பது குறித்து எங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கப்பலை அதிக முன்னுரிமை கொடுத்து கவனித்து வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியா்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் நாங்கள் தொடா்ந்து பேசி வருகிறோம்’ என குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.