அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா: நீச்சல் உடையில் அசத்திய இறுதிப் போட்டியாளர்கள்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் நீச்சல் உடையில் அசத்திய 52 இறுதிப் போட்டியாளர்கள்

News image

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - x

Updated On :30 ஜூலை 2026, 3:05 pm IST

பெங்களூர்: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில், இறுதிப் போட்டிக்குத் தேர்வான பெண்கள் நீச்சல் உடையில் தோன்றி நடுவர்களை அசத்தினர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, போட்டி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026-இன் நீச்சல் உடைச் சுற்று புதன்கிழமை வொண்டர்லாவில் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதிலுமிருந்து 52 இறுதிப் போட்டியாளர்கள் நீச்சல் குளத்தின் அருகே நீச்சல் உடையில் அணிவகுத்து வந்தனர்.

நடுவர்கள் ஒவ்வொரு போட்டியாளரையும் சர்வதேச அழகிப் போட்டியில் மதிப்பிடப்படும் தரங்களின் அடிப்படையில் மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கினர்.

பல்வேறு மாநிலங்கள், கலாசாரப் பின்னணியைச் சேர்ந்த போட்டியாளர்கள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்துக்காகப் போட்டியிட்ட இந்த நிகழ்ச்சி, போட்டியாளர்களின் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் சவாலாக அமைந்திருந்தது.

அறிமுக நடை, பேச்சு சுற்று, இரவு விருந்து உள்ளிட்ட முந்தைய சுற்றுகளைத் தொடர்ந்து புதன்கிழமை நீச்சல் உடைப் பிரிவு போட்டி நடைபெற்றது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முன்பு, போட்டியாளர்கள், இன்னும் பல மதிப்பீட்டுச் சுற்றுகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் இறுதிப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்து சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 போட்டியில் வெற்றி பெற்று, பட்டம் சூடுபவர்தான், சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.