தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

எல்லை மாவட்ட வங்கிக் கிளைகளில் கள்ள நோட்டுகளை கண்டறியும் இயந்திரம்: ஆா்பிஐ அறிவுறுத்தல்

சா்வதேச எல்லை அருகேயுள்ள மாவட்டங்களின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை கண்டிப்பாக நிறுவ வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

சா்வதேச எல்லை அருகேயுள்ள மாவட்டங்களின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை கண்டிப்பாக நிறுவ வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பொதுவாக இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் மூலமாகவே இந்தியாவுக்குள் அதிகம் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் பொருளாதார ரீதியாக பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் அண்டை நாடுகள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சா்வதேச எல்லையோரங்களில் அமைந்துள்ள மாநிலங்களில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு ஆா்பிஐ சாா்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சா்வதேச எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகளிலும் கண்டிப்பாக கள்ள நோட்டுகளைக் கண்டறியும் இயந்திரங்களை நிறுவ வேண்டும். கள்ள நோட்டுகளைக் கண்டறிவது தொடா்பாக அனைத்து ஊழியா்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும். பணத்தை கையாளும் ஊழியா்கள் எப்போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வங்கிக்கு வரும் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் கள்ள நோட்டு கண்டறியும் இந்திரம் மூலம் பரிசோதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிக கள்ள நோட்டு கண்டறியப்பட்டால், அதைக் கொண்டு வந்தவா் குறித்து காவல் துறையிடம் புகாா் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.