மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர் யார்? காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் போட்டி!

கர்நாடகத்தின் துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி...

Karnataka deputy cm

டி.கே. சிவகுமாருக்குப் பின் கர்நாடகத்தின் துணை முதல்வர் யார்? - ENS

Published On :

கர்நாடகத்தில், துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கர்நாடகத்தில், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து துணை முதல்வரான காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்.

இதனைத் தொடர்ந்து, புதியதாக அமையவுள்ள டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடிப்பது மட்டுமின்றி துணை முதல்வர் பதவிக்கும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதில், கர்நாடகத்தின் துணை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.ஹெச். முனியப்பா, ஜி. பரமேஸ்வரா, ஷிவானந்த் பாட்டில், பிரியங்க் கார்கே, ஈஸ்வர் காந்த்ரே, ஹெ.சி. மஹாதேவப்பா, சதீஷ் ஜார்கிஹோலி, எம்.பி. பாட்டில் மற்றும் சித்தராமையாவின் மகன் யதீந்திரா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவாளர்கள் தங்களின் பலத்தை வெளிகாட்டும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், கர்நாடக மற்றும் மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ள முனியப்பாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரின் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) காலை அவரின் உருவப் படங்களை ஏந்தியபடி பெங்களூருவில் பேரணி நடத்தினர்.

இதேபோல், சித்தராமையாவின் மகன் யதீந்திராவின் ஆதரவாளர்கள் மைசூருவில் உள்ள ராமசாமி சர்கிள் பகுதியில் பேரணி நடத்தியுள்ளனர்.

மேலும், துணை முதல்வர் பதவிக்கோரி மஹாதேவப்பா, பிரியங்க் கார்கே, ஈஸ்வர் காந்த்ரே மற்றும் எம்.பி. பாட்டில் ஆகியோரின் ஆதரவாளர்களும் பேரணி, வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

Summary

In Karnataka, intense competition prevails among Congress legislators for the post of Deputy CM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.