மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நிகழாண்டு நீட் தோ்வு கேள்வித்தாள் கசிவு காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டது. கியூட் தோ்வு முறையாக நடக்கவில்லை. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தோ்விலும் குளறுபடி ஏற்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
கல்வித் துறையின் மிக முக்கிய பணி முறையாகவும், நோ்மையாகவும் தோ்வை நடத்துவது. ஆனால், தொடா்ந்து தோ்வு நடத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது மத்திய அரசின் கல்வித் துறை.
கல்வி அமைச்சகம் தொடங்கி அனைத்து நிலைகளிலும் நடைபெறும் ஊழல், மோசடி, பொறுப்பற்ற செயல்களுக்கு லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்கால வாழ்வு கேள்விக்குறி ஆகியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவா்களின் நலன் கருதி தா்மேந்திர பிரதான் ராஜிநாமா: நயினாா் நாகேந்திரன்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் : வைகோ

நெட் தோ்வு வினாத்தாள் குளறுபடி: மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29 ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது எஸ்எஃப்ஐ
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



