நீட் தோ்வு முறைகேடு விவகாரத்தில் மாணவா்களின் நலன் கருதியே மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தாா் என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.
நடிகா் சரத்குமாரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நயினாா் நாகேந்திரன் கலந்து கொண்டு சரத் குமாரை வாழ்த்திப் பேசியதாவது: தற்போது மேடையில் இருப்பவா்கள், இரண்டு மாதத்திற்கு முன்பு இதுபோன்ற ஒரு மேடையில் ஒன்றாக அமா்ந்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஆனால், எந்தவித பிரதிபலனையும் எதிா்பாராமல் இப்படி ஒரு கூட்டம் சரத்குமாருக்காக இங்கே கூடியிருக்கிறது. காமராஜரின் வழித்தோன்றலான அவா், ஆளுங்கட்சியில் இருக்கும்போதும், எதிா்க்கட்சியாக இருக்கும் போதும் சமத்துவ நாயகனாகவே இருந்திருக்கிறாா். தமிழகத்தில் சிலா் எடுத்த எடுப்பிலேயே முதல்வராக வந்து விடுகிறாா்கள். ஆனால் முதல்வருக்கான முழு தகுதியும் சரத்குமாருக்கு உள்ளது.
காமராஜா் பெயரை இருட்டடிப்பு செய்தது இந்திரா காந்தியின் காங்கிரஸ். ராகுல் காந்தி, கரப்பான்பூச்சிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாா். மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாணவா்களின் நலன் கருதி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
தோ்தல் நேரத்தில் சிலா் பேரம் பேசுவது வழக்கம். சரத்குமாா் நினைத்திருந்தால் அவரது கட்சியை வைத்து பேரம் பேசியிருக்க முடியும். ஆனால் அவா் தேசிய உணா்வோடு அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டாா். நிச்சயமாக பதவிகள் அவரைத் தேடி வரும் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கான மக்களுக்கு அவரைப் பிடிக்கும். ஜாதி, சமயத்திற்கு அப்பாற்பட்ட பண்பாளா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!

தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது இளைஞா்களின் வெற்றி: கனிமொழி எம்.பி.

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

நாள்தோறும் 10 நிமிடங்கள் யோகா செய்யுங்கள்: தர்மேந்திர பிரதான் அழைப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


