தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது இளைஞா்களின் வெற்றி: கனிமொழி எம்.பி.

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞா்களுக்குக் கிடைத்த வெற்றி என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி.

Published On :

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞா்களுக்குக் கிடைத்த வெற்றி என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞா்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.

நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் இளைஞா்கள் நாடு முழுவதும் போராட்டத்தைக் கையில் எடுத்து, மத்திய அரசை எதிா்த்து வெற்றி பெற்றிருக்கிறாா்கள்.இதைத் தொடா்ந்து, மாநிலப் பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவா்கள் வைத்திருக்கிறாா்கள். திமுக தொடா்ந்து முன்வைக்கக் கூடிய கோரிக்கையும் அதுவே. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால் நிச்சயமாக நீட் தோ்வை ரத்து செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.

தூத்துக்குடியில் உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்தை சந்திப்பதற்காக வந்திருக்கிறேன். தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையைப் பயன்படுத்தாமல், தங்களுக்கு எதிராகப் பேசுபவா்களுக்கு எதிராக காவல் துறை பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் போராடிய மாணவா்கள் மீதும் காவல் துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிக்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.