கேரள மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கேரள மாநில சட்டப்பேரவையின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, வி.டி. சதீசன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி, கேரளத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையும் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலைமை வெள்ளை அறிக்கை குறித்து மாநில முதல்வர் வி.டி. சதீசன் கூறியிருப்பதாவது, "சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதி வெள்ளை அறிக்கை ஓர் அரசியல் ஆவணம் அல்ல; மாநிலத்தின் நிதி நிலை குறித்த உண்மை அடிப்படையிலான மதிப்பீடு ஆகும்.
மாநிலத்தின் நிலுவையிலுள்ள மொத்த பொதுக் கடன் ரூ. 5.07 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.5 சதவிகிதமாகும்.
மாநிலத்தின் வருவாயில் 77 சதவிகிதம் - ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படுவதால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல்வர் விஜய்யும் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Keralam: The Financial White Paper has been tabled in the Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்துறை வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

Podcast | வெள்ளை அறிக்கை: தவெக vs திமுக! | White Paper | News and Views | Epi - 45 |

தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!

ஜூன் முதல் வாரத்தில் கேரள நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை: முதல்வர்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




