கேரளத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் ஜூன் முதல் வாரம் வெளியிடப்போவதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் வி.டி. சதீசன் முதல்வராகவும் 20 உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் திங்கள்கிழமை (மே 18) பதவியேற்றனர்.
பதவியேற்ற சில நாள்கள் கழித்து, மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க, அந்த மாநில அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது.
இந்தக் குழுவிற்கு முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமை தாங்குவார் என்றும் நிதித்துறையில் கூடுதல் தலைமைச் செயலராக உள்ள கே.ஆர். ஜோதிலால் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தில்லி சென்ற முதல்வர் வி.டி. சதீசன், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து மாநில - மத்திய அரசுக்கான உறவுகள் மற்றும் நிதி சிக்கல்கள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வி.டி. சதீசன், கேரளத்தில் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் ஜூன் முதல் வாரம் வெளியிடப்போவதாக தெரிவித்தார்.
Summary
Kerala Chief Minister V.D. Satheesan announced on Tuesday that a white paper on the state's financial situation would be released in the first week of June.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!

மாநில நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க குழு அமைப்பு!

மகளிருக்கு இலவசப் பேருந்து; பதவியேற்ற முதல் நாளிலேயே 3 திட்டங்கள் அறிவிப்பு!

தமிழக நிலைமை பற்றி விரைவில் வெள்ளை அறிக்கை: விஜய் பேச்சு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




