முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image

முதல்வர் விஜய்யுடன் பிரவீன் சக்ரவர்த்தி - X

Updated On :4 ஜூன் 2026, 10:23 pm IST

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவை வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Summary

முதல்வர் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக விஜய் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலி கான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி, ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Summary

Praveen Chakravarty Announced as Congress Rajya Sabha Candidate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.