தனி இயக்கம் தொடங்கினார் ரஜினிகாந்தின் மனைவி லதா!பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இன்று சுற்றுச்சூழல் தினம்! இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை!

இன்று சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவது குறித்து

News image

உலக சுற்றுச்சூழல் தினம் - X page

Updated On :5 ஜூன் 2026, 4:44 pm IST

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், 2026ஆம் ஆண்டு மட்டும் சற்று ஸ்பெஷலாக மாறியிருக்கிறது. காரணம் கொளுத்தும் வெய்யில்தான்.

சிட்டுக் குருவி அழிந்துவிட்டது, நிலப்பரப்புகளே இல்லை, மரங்கள் வெட்டப்படுகிறது என இத்தனை காலமும் சுற்றுச்சூழல் நாள் அன்று மனிதர்கள் வெட்கமே இல்லாமல் எழுதியும், சொல்லியும் வந்திருக்கிறோம்.

இப்படியே சென்றால் 2050ம் ஆண்டில் அதிக வெப்பம், 2030-ல் கடல் உள் வாங்கும் என்று படிக்கும்போதுகூட, அத்தனை காலம் நாம் இருக்கப் போகிறோமா என்ன? என்று பலரும் போகட்டும் என்று கடந்து சென்று விடுவோம்.

ஆனால், மக்கள் நினைத்தது போல இயற்கை அவ்வளவு அமைதியானது இல்லை என்பதை இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

உடனடியாக மரங்களை நட வேண்டும், இருக்கும் மரங்களை வெட்டுவதைத் தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், காற்று மாசுபாட்டைக் குறைக்க எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று ஆண்டுதோறும் சொல்வது ஒரு வழக்கமாகிப் போனதால், இந்த முறையும் அதைச் சொல்லிவிடலாம். ஆனால், யாரும் இதைச் செய்யப்போவதில்லை. அப்படியே செய்தாலும் கடந்த 200 ஆண்டு காலமாக நாம் படிப்படியாக செய்து மாற்றங்கள் மாறப்போவதில்லை. இயற்கையும் நம்மை விடப்போவதில்லை.

ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பசுமைப் பகுதிகளை விரிவுபடுத்துவது போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாணவர்களுக்கும் பாடமெடுக்கப்படும். கல்லூரி மாணவர்கள் குப்பைகளைப் பொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுவார்கள். குளங்கள் சீரமைக்கப்படும். அடுத்தநாள் வழக்கம்போலத்தான்.. 364 நாளக்ளும் அதே சுற்றுச்சூழலை கெடுக்க மனிதனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பார்கள்.

ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பின் எதிரொலி குறித்து கவலைப்பட இன்னும் அதிக நாள்கள் இல்லை. அதிகரித்து வரும் வெப்பம், மிக மோசமான வானிலை மாறுபாடுகள், அதி தீவிர கனமழை, காற்று மாசுபாடு என அனைத்தும் மக்களை சுற்றிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளால் சிக்கித் தவிக்கிறார்கள். இங்கே சுவாசிக்க முடியவில்லை என தில்லி மக்கள் கூக்குரலிடுகிறார்கள். இன்று நாட்டின் வெப்பமான நகரம் என நாள்தோறும் தரவு வெளியிடுகிறது வானிலை ஆய்வு மையம். இதிலிருந்து மீள வழியேயில்லை. இந்த ஆண்டு வெய்யிலில் தப்பிப் பிழைத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடிக்கும் வெய்யிலில் செத்து மடியத்தான் போகிறான் மனிதன்.

இயற்கையை அப்படியே விட்டுவிட்டால்கூட அது எப்படியோ மீண்டுவிடும். ஆனால், கொன்று புதைத்து, எங்கே முளைத்துவிடுமோ என ஆசிட் ஊற்றிய பிறகு, சுற்றுச்சூழல் தினங்களைக் கொண்டாடி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதே நாள்தோறும் கடும் வெய்யிலில் வேலை செய்துகொண்டிருக்கும் சாமானிய மனிதர்களின் எண்ணமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.