வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பாறையிலிருந்து தவறி விழுந்த இந்திய ராணுவ வீரர் பலி!

ராணுவ நடவடிக்கையின் போது, பாறையிலிருந்து தவறி கீழே விழுந்த இந்திய ராணுவர் பலியான சம்பவம் பற்றி...

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 11:14 am IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் போது, பாறையிலிருந்து தவறி கீழே விழுந்த இந்திய ராணுவர் ஒருவர் பலியானார்.

ராஜௌரி மாவட்டத்தில் உள்ள கம்பீர் முகலான் - டோரிமல் பகுதியில், 'ஆபரேஷன் ஷெருவாலி' என்ற ராணுவ நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ​​கரடுமுரடான மற்றும் சவாலான மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்த வீரர், கால் இடறி ஒரு பாறைச் சரிவிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பீர் முகலான் - டோரிமல் பகுதிகளின் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் 'ஆபரேஷன் ஷெருவாலி' நடவடிக்கையானது, 16 ஆவது நாளாகத் தொடர்கிறது. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகளை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், பலியான ராணுவ வீரர் குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

Summary

An Indian Army soldier died after slipping and falling from a rock during an army operation in the Rajouri district of Jammu and Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.