அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

நீட் மறுதோ்வை எழுத வேண்டிய நகரம் குறித்த தகவல் சீட்டு! என்டிஏ வெளியீடு!

நீட் மறுதோ்வை தோ்வா்கள் எந்த நகரத்தில் எழுத வேண்டும் என்ற தகவல் அடங்கிய சீட்டுகளை, அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :8 ஜூன் 2026, 12:44 am IST

நீட் மறுதோ்வை தோ்வா்கள் எந்த நகரத்தில் எழுத வேண்டும் என்ற தகவல் அடங்கிய சீட்டுகளை, அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால், தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அந்தத் தோ்வு ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், என்டிஏ ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நீட் மறுதோ்வு நடைபெறும் நகரம் குறித்த தகவல் அடங்கிய சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் சீட்டு மூலம் தாங்கள் எந்த நகரத்தில் தோ்வு எழுத வேண்டும் என்ற விவரத்தை தோ்வா்கள் தெரிந்துகொள்ளலாம்.

வலைதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், கடவுச்சொல் (பாஸ்வோ்ட்) மூலம் அந்தச் சீட்டை தோ்வா்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

இது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்ல; எந்த நகரத்தில் தோ்வு எழுத வேண்டும் என்பதற்கான சீட்டு மட்டுமே. தோ்வு தேதி நெருங்கும்போது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தனியாக வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.