பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு செருப்பு மாலை அணிவித்த கிராம மக்கள்!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

News image

திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்ற மக்கள். - X

Updated On :7 ஜூன் 2026, 5:08 pm IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் அமர்ஹதா கிராமத்தைச் சேர்ந்த சன்னாஷி மன்னா என்ற திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி, அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகளிடமிருந்து பணம் பறித்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட திட்டத்துடன் தொடர்புடைய பலரின் ஆதார் அட்டைகள் மற்றும் வேலை அட்டைகள் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபரை மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து, கயிற்றால் கட்டி கிராம மக்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தலையிட்டு அந்த நபரை மீட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கிராம மக்களிடமிருந்து அவரை மீட்டதாகக் கூறிய காவல்துறையினர் அவர் மீது முறைப்படி எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினர். இந்த விடியோவின் நம்பகத்தன்மை பற்றி சரிபார்க்க முடியவில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பொதுமக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Summary

Trinamool Congress functionary paraded wearing a garland of slippers in West Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.