இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கர்நாடகத்தில் கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு!

கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது பற்றி...

News image

மல்லிகார்ஜுன கார்கே - IANS

Updated On :11 ஜூன் 2026, 5:54 pm IST

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஜூன் 11) அறிவித்தது.

கர்நாடகத்தில் நான்கு மாநிலங்களவை இடங்கள் ஜூன் 25 ஆம் தேதியுடன் காலியாக உள்ளன. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வரும் ஜுன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த 4 இடங்களில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆகவே, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, மன்சூர் அலி கான், பவன் கேரா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், பாஜக சார்பில் எம். நாகராஜா மனுதாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான திங்கள்கிழமைக்குள் (ஜூன் 8) ஐந்து வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கக்கப்பட்டது.

இந்த நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அளிக்கப்பட்ட கடைசி நாளான இன்று, நான்கு பேர் மட்டுமே களத்தில் இருந்ததால் இவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே, மன்சூர் அலி கான், பவன் கேரா, எம். நாகராஜா ஆகியோர் வெற்றிபெற்ற வேட்பாளர்களாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The Election Commission announced on Thursday (June 11) that four Rajya Sabha MPs, including Congress leader Mallikarjun Kharge, had been elected unopposed from Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.