திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

வன்முறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது: மணிப்பூர் முதல்வர்

மணிப்பூர் வன்முறை பற்றி மாநில முதல்வர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக..

News image

மணிப்பூர் - file photo

Updated On :11 ஜூன் 2026, 12:44 pm IST

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நடைபெறும் வன்முறைகளை மணிப்பூர் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என அம்மாநில முதல்வர் ஓய். கெம்சந்த் சிங் தெரிவித்தார்.

காங்போக்பி மாவட்டத்தின் லெய்லோன் வைஃபெய் கிராமத்திலிருந்து மே 13 அன்று நாகா சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடத்தப்பட்ட நிலையில், அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

கங்போக்பி மாவட்டத்தின் லெய்லோன் வைஃபெய் கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட ஆறு அப்பாவி நாகா கிராமவாசிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மணிப்பூர் அரசு இந்த இழிச்செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி. இவ்வழக்கு என்ஐஏ மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. நமது சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை.

இத்தகைய வன்முறையை மாநில அரசு பொறுத்துக்கொள்ளாது, இந்தக் கொடுமைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. கொலைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் ஆயுதமேந்திய குழுக்களால் கடத்தப்பட்ட 14 குகி இனத்தவர் ஜூன் 9 அன்று விடுவிக்கப்பட்ட மறுநாளே இந்த ஆறு பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

மணிப்பூர் காவல்துறை, சிஆர்பிஎஃப் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 450 வீரர்கள், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவின் உதவியுடன் மேற்கொண்ட சுமார் 24 மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மணிப்பூரில் அமைதி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஆறு பேரின் உடல்கள் அதிகாலை 2 மணியளவில் இம்பாலில் உள்ள ஜேஎன்ஐஎம்எஸ் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, என்ஐஏ குழுவினர் அங்குள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தைப் பார்வையிட்டனர்.

இதற்கிடையில், காவல்துறையினரால் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு சேனாபதி மாவட்டத்தில் உள்ள லியாங்மாய் தஃபு பகுதியில் உள்ள 'நாகா மக்கள் முன்னணி' அமைப்பின் மணிப்பூர் பிரிவு அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

The Manipur government will not remain as a mute spectator to atrocities, Manipur Chief Minister Y Khemchand Singh said on Thursday, after police found the mortal remains of six people suspected to be of missing Naga men, who had been held hostage by armed groups in Kangpokpi district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.