வடகிழக்கு மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகினர்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திற்கான மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மணிப்பூரில் அம்மாநில பாஜக தலைவரான ஏ. சாரதா தேவி, அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் தாய் தாகக் மற்றும் மேகாலயாவில் பாஜக கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் ஜேம்ஸ் சங்மா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 3 மாநிலங்களிலும் தலா ஒரு மாநிலங்களவை இடம் உள்ளது.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காந்து பேசுகையில், "பல ஆண்டுகளாக அருணாச்சலப் பிரதேசத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தாய் தாகக், தேசிய அளவில் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கவலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். பொது வாழ்வில் அவருக்கு இருக்கும் அனுபவம் மாநிலங்களவையில் அருணாச்சலப் பிரதேசத்திற்காக ஒலிக்கும்” என்று கூறினார்.
மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாரதா தேவிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
அதேபோல, பாஜக கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த மேகாலய முதல்வர் கான்ராட் கே. சங்மா, மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது சகோதரர் ஜேம்ஸ் சங்மாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மிசோரமின் ஒரு தொகுதிக்கான மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 18 அன்று நடைபெறவுள்ளது. இதில், ஆளும் சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கே. லால்ட்லுவாங்கிமா, மிசோ தேசிய முன்னணியின் வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஜோதான்சங்கி ஹ்மாருக்கு எதிராகப் போட்டியிடுகிறார்.
Summary
Rajya Sabha Elections: BJP alliance candidates in the Northeast elected unopposed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








