கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

மேக்கேதாட்டு அணை: மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்த டி.கே. சிவகுமார்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சரை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சந்தித்தது பற்றி..

News image

மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

Updated On :12 ஜூன் 2026, 3:31 pm IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று(ஜூன் 12) சந்தித்து மனு அளித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இன்று அவர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து மனு அளித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றது முதல் மேக்கேதாட்டு விவகாரத்தில் அவர் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Mekedatu Dam: D.K. Shivakumar meets Union Water Resources Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.