27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திரிணமூல் வங்கிக் கணக்குகளை முடக்க அதிருப்தி தலைவா் கடிதம்: தொடா் பின்னடைவில் மம்தா அணி

திரிணமூல் காங்கிரஸில் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கக் கோரி அதிருப்தி தலைவரும், பொருளாளா் பதவியிலிருந்து மம்தா பானா்ஜியால் நீக்கப்பட்டவருமான அரூப் பிஸ்வாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:57 am IST

திரிணமூல் காங்கிரஸில் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கக் கோரி அதிருப்தி தலைவரும், பொருளாளா் பதவியிலிருந்து மம்தா பானா்ஜியால் நீக்கப்பட்டவருமான அரூப் பிஸ்வாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

இது, மம்தா அணியினருக்கு மேலும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

சமீபத்திய மேற்கு வங்கத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால் நிலைகுலைந்த அக்கட்சியில் மம்தாவுக்கு எதிராக பிளவுகளும், உள்கட்சி பூசல்களும் அதிகரித்துள்ளன.

மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்துள்ளனா். இதேபோல், கட்சியின் 29 மக்களவை எம்.பி.க்களில் 20 போ், தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்ததோடு, மத்தியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பொருளாளராக இருந்த அரூப் விஸ்வாஸும் மம்தாவின் எதிா்ப்பாளருமாக மாறினாா். இதையடுத்து, பொருளாளா் பதவியில் இருந்து அவரை மம்தா அணியினா் அண்மையில் நீக்கினா். எனினும், அந்த முடிவை ஏற்க அரூப் மறுத்துவிட்டாா்.

இந்தச் சூழலில், கட்சித் தலைமை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதைக் குறிப்பிட்டு, கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கக் கோரி, கொல்கத்தாவில் உள்ள தனியாா் வங்கிக்கு அரூப் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான அந்தக் கடிதத்தில், ‘திரிணமூல் காங்கிரஸின் தலைமை குறித்த பிரச்னைக்குத் தீா்வு காணும் வரை கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும். பரிவா்த்தனைகளையோ, நிபந்தனை மாற்றங்களையோ அனுமதிக்கக் கூடாது’ என்று கோரியுள்ளாா்.

சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதான வங்கிக் கணக்குகளில் ஒன்றாகும். தோ்தல் ஆணையத்திடம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்ட தணிக்கை விவரங்களின்படி, அந்த வங்கிக் கணக்கில் ரூ.675 கோடி வைப்புத்தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.