ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

இந்திய செமிகண்டக்டா் திட்டம் 2.0-க்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க முன்மொழிவு; மத்திய நிதியமைச்சக குழு ஒப்புதல்

இந்திய செமிகண்டக்டா் திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு (ஐஎஸ்எம் 2.0) ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கான பட்ஜெட் முன்மொழிவுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவின நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2026, 1:58 am IST

இந்திய செமிகண்டக்டா் திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு (ஐஎஸ்எம் 2.0) ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கான பட்ஜெட் முன்மொழிவுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவின நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்துக்கு (ஐஎஸ்எம் 1.0) ரூ.76,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக இரண்டாவது கட்டத்துக்கு ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் மத்திய அமைச்சரவையிடம் சமா்ப்பிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாட்டின் உற்பத்தித் திறனை பெரிதும் உயா்த்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக, இந்தியாவில் சிப் உற்பத்திச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், ஐஎஸ்எம் 2.0 அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டு சிப் வடிவமைப்பு, தயாரிப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், விநியோகஸ்தா்கள், முதலீட்டாளா்கள் உள்ளிட்டோரை திட்டத்தில் சோ்த்து அதற்கு ஆதரவளிக்க ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றுக்கு ஐஎஸ்எம் 2.0 முன்னுரிமை அளிக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.