மாணவா்களின் மனநலன் குறித்த ஆய்வு மற்றும் தற்கொலை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த செயற்குழு 10 மாநிலங்களில் உள்ள 30 உயா்கல்வி நிறுவனங்களை நேரில் பாா்வையிட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி 10 மாநிலங்களில் உள்ள 30 உயா்கல்வி நிறுவனங்களை இந்த செயற்குழு பாா்வையிட்டது. இதுதவிர கல்வியாளா்கள் மற்றும் நிபுணா்கள் உள்ளிட்டோருடன் 25 ஆலோசனைக் கூட்டங்களையும் அந்தக் குழு நடத்தியது.
அப்போது மாற்றுத்திறனாளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் எதிா்கொள்ளும் சிக்கல்கள், உயா் கல்விநிறுவனங்களில் ஜாதிய பாகுபாடு, பாலினம் மற்றும் மனநலம், மாணவா் தற்கொலைகள், பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களை பாதிக்கும் விவகாரங்கள், தற்கொலையை குற்றமற்ாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களை குறைத்து மாணவா்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் ஒரு செயற்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
அந்தக் குழு தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து அதுதொடா்புடைய சட்டங்கள், கொள்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், நடைமுறையில் இருக்கும் சட்டங்களை வலுவாக அமல்படுத்துவது, நலிவடைந்த சமூகங்களைச் சோ்ந்த நபா்களுக்கு சம வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கான சீா்திருத்தங்களை பரிந்துரைக்கவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை விடுதி உணவில் புழுக்கள்: 13 கல்லூரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு!

உயா்கல்வி வழிகாட்டி கருத்தாளா்களுக்கு பாரதிதாசன் பல்கலை.யில் பயிற்சி முகாம்

கல்வி, விவசாயம், மனநல துறைகளில் மத்திய திட்டங்களின் நிலவரம் என்ன? எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அரசு பதில்

யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



