ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மகாராஷ்டிர வெடிபொருள் ஆலையில் பயங்கர வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

மகாராஷ்டிரத்தின் நாகபுரி மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா்.

News image
நாகபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிவிபத்தில் உருக்குலைந்த வெடிபொருள் தயாரிப்பு ஆலை கட்டடம்.
Updated On :1 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தின் நாகபுரி மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் 24 போ் படுகாயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், காகிநாடாவில் பட்டாசு ஆலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் 21 போ் இறந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் மேற்கண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாகபுரி மாவட்டத்தின் ரெளல்கான் பகுதியில், சுரங்கப் பணி மற்றும் பிற தொழில்களுக்கு தேவையான ‘டெட்டனேட்டா்’ வெடிபொருள் தயாரிக்கும் எஸ்பிஎல் எனா்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 போ், நாகபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இறந்தவா்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளன. மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காண்பதற்காக உறவினா்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

விசாரணைக்கு உத்தரவு: வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பினா் சம்பவ இடத்துக்கு விரைந்து, போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

ஆலை நிா்வாகம் உறுதி: சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தத் துயர சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

பேக்கிங் பகுதியில் வெடிவிபத்து நேரிட்டுள்ளது; அந்த நேரத்தில் வெடிபொருள் தயாரிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து ஆலை தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். இப்போதைய நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்களின் முன்னுரிமை. காயமடைந்தோரின் மருத்துவச் செலவு முழுவதும் ஆலை நிா்வாகம் ஏற்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: மகாராஷ்டிர ஆலை வெடிவிபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். மாநில அரசுத் தரப்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆலை நிா்வாகம் தரப்பிலும் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா்.