எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டால் விறகுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றுமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் விறகு அடுப்புக்கு உணவகங்கள், விடுதிகள், தேநீர்க் கடைகள் மாறத் தொடங்கியுள்ளனர். இதனால், விறகுகளின் தேவை அதிகரித்துள்ளது. சராசரியாக ஒருநாளில் ஒரு டன் விறகு விற்பனை, தற்போது 10 டன்னாக அதிகரித்துள்ளது.
விறகுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. விறகுகள் ஒரு டன்னுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரையில் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு டன் விறகு விலை ரூ. 6,000-லிருந்து ரூ. 8,000-ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மதுரை மாவட்டத்தில் இன்னும் இரு நாள்களில் விறகுத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், விறகு தேவையின் அதிகரிப்பு, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
Summary
Cylinder shortage: Firewood prices also increase!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடியாக அதிகரிப்பு

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




