பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிலிண்டர் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பகல் 12 மணி வரையில் மக்களவை ஒத்திவைப்பு

Lok Sabha

மக்களவை - கோப்புப் படம்

Published On :

பல்வேறு பிரச்னைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தையடுத்து, நண்பகல் 12 மணிவரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் - PTI

மத்திய கிழக்கு போரால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், உணவகங்கள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவை மூடப்படும் அபாயம் நேரிட்டுள்ளது.

நாட்டில் அடுத்த இரு வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும், எரிவாயு இருப்பு குறைவாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிக்கின்றன.

இதனால் 5 நட்சத்திர விடுதிகள் முதல் சாலையோர டீக்கடை, தட்டுக்கடைகள் வரை அனைத்துக்கும் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றே பல்வேறு நகரங்களில் உணவகங்களை மூடத் தொடங்கிவிட்டனர். அதிக அளவில் தனியர்கள் வசிக்கும் பெங்களூரில் ஏற்கெனவே ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

Summary

Parliament Budget Session: Lok Sabha adjourned till 12pm amid uproar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.