சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கனமழையால் பிரதமரின் கோக்ரஜார் பயணம் ரத்து!

கோக்ரஜார் பயணம் ரத்து செய்யப்பட்டது பற்றி..

News image
பிரதமர் நரேந்திர மோடி- X | BJP
Updated On :13 மார்ச் 2026, 9:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

அசாம் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிற்பகல் குவாஹாட்டி வந்தடைந்தார். 

குவாஹாட்டி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். 

இதையடுத்து, கோக்ரஜார் மாவட்டத்தில்  ரூ. 4,570 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருந்தார். ஆனால், கனமழையின் காரணமாக கோக்ராஜார் செல்லும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோக்ரஜார் பகுதிக்காக அறிவிக்கப்பட்ட, ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தற்போது குவாஹாட்டிலிருந்தபடியே காணொலி வாயிலாகத் தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை குவாஹாட்டியில் ரூ. 19,680 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் இம்மாநிலத்திற்கு மேற்கொள்ளும் நான்காவது வருகை இதுவாகும். இன்று இரவு குவாஹாட்டியில் தங்கி, சனிக்கிழமை அன்று சில்சார் நகருக்குச் சென்று, சுமார் ரூ. 23,550 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

நிகழாண்டில் அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

summary

Prime Minister Narendra Modi arrived in Guwahati on Friday afternoon on a two-day visit to Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.