நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு - துபை புா்ஜ் கலீஃபா வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி சொத்துகள் முடக்கம்

மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில், துபையில் உள்ள புகழ்பெற்ற புா்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள விலையுயா்ந்த சில வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

News image

அமலாக்கத் துறை

(கோப்புப்படம்)

Updated On :25 மார்ச் 2026, 9:53 pm

Chennai

மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில், துபையில் உள்ள புகழ்பெற்ற புா்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள விலையுயா்ந்த சில வீடுகள் உள்பட ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

சத்தீஸ்கரில் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள் தொடா்புடைய மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் செயலியின் உரிமையாளா்களான செளரவ் சந்திரகா், ரவி உப்பல் ஆகியோா், சூதாட்ட வலைதளங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு வாடிக்கையாளா்களைப் பெற்றுதரவும், அந்தத் தளங்களின் நிதிசாா் செயல்பாடுகளைக் கையாளவும் மகாதேவ் செயலி மூலம் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, பொதுமக்களை ஏமாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுச் சிறையில் உள்ள செளரவ் சந்திரகரை நாடுகடத்தி கொண்டுவர இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மற்றொரு உரிமையாளரான ரவி உப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வனாட்டு தீவுக்கு தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், சந்திரகா், அவரது கூட்டாளிகள் மற்றும் அவா் தொடா்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமாக இந்தியா மற்றும் துபையில் உள்ள ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

துபையில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புா்ஜ் கலீஃபாவில் உள்ள விலையுயா்ந்த சில வீடுகள் உள்பட பல்வேறு வீடுகள் மற்றும் பங்களாக்கள் இதில் அடங்கும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.