கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசனை காங்கிரஸ் மேலிடம் வியாழக்கிழமை தேர்வு செய்துள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்கு தேர்வான காங்கிரஸ் உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய் மாக்கன் மற்றும் முகுல் வாஸ்னிக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இவர்களின் அறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
சுமார் 10 நாள்களுக்கு மேல் கேரள முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை திணறியது.
இந்த நிலையில், வி.டி. சதீசனை கேரள முதல்வராகவும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக காங்கிரஸ் தலைமை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, விரைவில் முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்புக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
V.D. Satheesan Selected as Kerala Chief Minister!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!

கேரள முதல்வராகும் கே.சி. வேணுகோபால்? பதவியேற்பு விழாவில் விஜய் பங்கேற்பு?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


