கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாக தாக்க வல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ரக ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

Published On :

குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாக தாக்க வல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ரக ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 700 கி.மீ. முதல் 1,200 கி.மீ வரை பாயும். 2,500 கிலோ வரையிலான வெடிகுண்டுகள் அல்லது அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

கடந்த 1979-ஆம் ஆண்டுமுதல் பயன்பாட்டில் உள்ள அக்னி-1 ஏவுகணை, ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. அப்போது, ஏவுகணையின் செயல்பாட்டு-தொழில்நுட்ப தரநிலைகள் சோதிக்கப்பட்டன. இந்தச் சோதனையில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அக்னி-1 ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவிடம் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரை பாய்ந்து தாக்கக் கூடிய அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.