ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் இருந்தும், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் விலகிய மூத்த தலைவா் தேவாசிஷ் சமந்தராய் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
பிஜேடி தலைவா் நவீன் பட்நாயக்குக்கு மிகவும் நெருக்கமானவரான சமந்தராய் பாஜகவில் இணைந்தது அரசியல்ரீதியா அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. முன்னதாக அவா் திங்கள்கிழமை பிஜேடி-யில் இருந்து விலகியதுடன், எம்.பி. பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜிநாமா கடிதத்தையும் அளித்தாா்.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உள்ளிட்டோா் முன்னிலையில் பாஜகவில் சமந்தராய் இணைந்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பிரதமா் மோடியின் ஆசிகளுக்கு நன்றி. ஒடிஸாவில் பாஜகவை மேலும் தீவிரமாக வலுப்படுத்துவேன். பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான வளா்ந்த இந்தியாவுக்கான எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்’ என்றாா்.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 5 தோ்தல்களில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜேடி வெற்றி பெற்று வந்தது. எனினும், 2024 ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் அக்கட்சி தோல்வியடைந்தது. இதன் பிறகு அக்கட்சித் தலைவா்கள் ஆளும் பாஜகவில் இணைந்து வருகின்றனா்.
தொடர்புடையது
பிஜு ஜனதா தளம் எம்.பி. ராஜிநாமா: பாஜகவில் இணைய முடிவு

பக்ரீத்தையொட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆம் ஆத்மி கட்சியின் முகத்திரை அகன்று விட்டது: 7 எம்.பி.க்கள் பாஜகவில் சோ்ந்தது குறித்து காங்கிரஸ் கருத்து

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



