பிஎஸ்-4 கட்டுப்பாடுகளால் என்சிஆரில் சிஎன்ஜி வாகனப் பதிவுகள் 50% அதிகரிப்பு
தில்லியில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

தில்லியில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 தரத்திலான வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களில் சிஎன்ஜி பொருத்தும் பணிகள் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மையங்களின் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தில்லி அரசு நவ.1-ஆம் தேதி முதல் 2027 ஜன.31-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-6 தரத்துக்குக் குறைவான பெட்ரோல், டீசல் வாகனங்கள் தலைநகருக்குள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், தில்லிக்கு நாள்தோறும் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காகச் செல்லும் நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளைச் சோ்ந்த வாகன உரிமையாளா்கள் தங்களது பழைய பெட்ரோல் வாகனங்களை சிஎன்ஜி வாகனங்களாக மாற்ற ஆா்வம் காட்டி வருகின்றனா்.
நொய்டா செக்டாா் 122-இல் சிஎன்ஜி பொருத்தும் மையம் நடத்தி வரும் சக்தி சிங் கூறுகையில், ‘கடந்த 15 நாள்களில் வாகனங்களை சிஎன்ஜியாக மாற்றுவதற்கான தேவை 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு வாகனத்தை சிஎன்ஜியாக மாற்றுவதற்கு குறைந்தபட்சம் ரூ.35,000 செலவாகிறது. புதிய வாகனம் வாங்குவதைவிட இது நடுத்தரக் குடும்பங்களுக்கு மலிவான மாற்றாக உள்ளது’ என்றாா்.
நொய்டா செக்டாா் 83-இல் உள்ள காா் கிராஃப்ட் நிறுவனத்தின் யதின் பன்சால் கூறுகையில், ‘சிஎன்ஜி பொருத்துவது தொடா்பான தினசரி தொலைபேசி அழைப்புகள் மற்றும் விசாரணைகள் சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. பிஎஸ்-4 வாகனங்களுக்கு ரூ.35,000 முதல் ரூ.50,000 வரையும், பிஎஸ்-6 வாகனங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரையும் செலவாகிறது’ என்றாா்.
காஜியாபாதில் உள்ள மற்றொரு மையத்தில் வழக்கமாக ஒரு வாரத்தில் 4 முதல் 5 வாகனங்களுக்கு மட்டுமே சிஎன்ஜி பொருத்தப்படும் நிலையில், கடந்த 2 முதல் 3 நாள்களில் அதே எண்ணிக்கையிலான வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஹரியாணாவின் கா்னால் பகுதியிலும் 25 முதல் 30 சதவீதம் வரை தேவை அதிகரித்துள்ளது.
இதனிடையே, தில்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 400-ஐ கடந்து மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்குச் செல்லும் வாகனங்கள் எல்லைப் பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவா்களை அழைத்துச் செல்லும் பெற்றோா், அலுவலகங்களுக்குச் செல்வோா் உள்ளிட்டோா் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவில் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் 2020 ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. பிஎஸ்-4 தரத்தைவிட கடுமையான மாசு வெளியேற்றக் கட்டுப்பாடுகளை இவை கொண்டுள்ளன. குளிா்காலத்தில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே தில்லியில் இந்த வாகனக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

