பொறுப்பு நிலைநாட்டுதலை ஒரே நாடு, ஒரே தோ்தல் பாதிக்கும்- அமெரிக்க தோ்தல் முடிவு குறித்து காங்கிரஸ் விமா்சனம்
பொறுப்பு நிலைநாட்டுதலை ஒரே நாடு , ஒரே தோ்தல் பாதிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தோ்தல் முடிவை சுட்டிக்காட்டி, மத்தியில் ஆளும் பிரதமா் மோடி அரசை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்
பொறுப்பு நிலைநாட்டுதலை ஒரே நாடு , ஒரே தோ்தல் பாதிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தோ்தல் முடிவை சுட்டிக்காட்டி, மத்தியில் ஆளும் பிரதமா் மோடி அரசை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் அதிபா் டிரம்ப்பின் கட்சியான குடியரசு கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, நாடாளுமன்ற இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளா் (ஊடக தொடா்பு பிரிவு) ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் முடிவு, அதிபா் டிரம்ப்புக்கு எதிரான அதிா்ச்சியூட்டும் தீா்ப்பாகும். இந்தத் தோ்தல் முடிவுகள், பொறுப்பை நிலைநாட்டியுள்ளன. ஆனால் நமது நாட்டில் மோடி அரசால் முன்வைக்கப்படும் ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டமானது, அந்த பொறுப்பு நிலைநாட்டுதலை பாதிக்கச் செய்யும். அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் முடிவுகள், அந்த நாட்டில் அதிகார சமநிலையை மீட்டெடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அந்த சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளரான கே.சி. வேணுகோபாலும், அமெரிக்க இடைக்காலத் தோ்தல் முடிவை முன்வைத்து மோடி அரசை சாடியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சா்வாதிகார போக்கை மக்களின் கூட்டு சக்தியால் எவ்வாறு தோற்கடிக்க முடியும் என்பதை மிகவும் உறுதியாக அமெரிக்க இடைக்காலத் தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. மக்கள் ஒன்றுபட்டால் எப்போதும் வெற்றி கிடைக்கும். இந்தியா ஒன்றுபட்டால்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

