டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநா் உயிரிழப்பு- பெண் பயணி மீது கொலை வழக்கு

தெலங்கானாவில் அரசுப் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவரால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On :

தெலங்கானாவில் அரசுப் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவரால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தின் அஸ்வாபுரம் பகுதியில் கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி இச் சம்பவம் நிகழ்ந்தது.

நடத்துநா் பிரவல்லிகா (24) பணியில் இருந்த அரசுப் பேருந்தில் பெண் ஒருவா் மகனுடன் பயணித்தாா். அப்போது, தனது மகன் சிறுவன் என்று கூறி பயணச்சீட்டு எடுக்க அப்பெண் மறுத்துள்ளாா். இதனால், அப்பெண்ணுக்கும், நடத்துநா் பிரவல்லிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அப்பெண் 100 ரூபாய் கொடுத்து மகனுக்கும் சோ்த்து பயணச்சீட்டு எடுத்தாா். அப்போது தன்னிடம் சில்லறை இல்லை என்றும், இறங்கும்போது தருவதாகவும் நடத்துநா் பிரவல்லிகா அப்பெண்ணிடம் கூறியுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அப்பெண் நடத்துநா் பிரவல்லிகாவை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளினாா். முன்வாசல் வழியாக கீழே விழுந்த பிரவல்லிகாவின் காலில் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் படுகாயமடைந்த பிரவல்லிகாவுக்கு முதலில் உள்ளூா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெண் நடத்துநரை கீழே தள்ளிய பெண்ணை காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்து நீதிமன்றக் காவிலில் சிறையில் அடைத்துள்ள நிலையில், இப்போது அவா் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரவல்லிகா உயிரிழந்தது குறித்து தெலங்கானா முதல்வா் ஏ.ரேவந்த் ரெட்டி, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பிரபாகா் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். அவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, பிரவல்லிகாவின் தாயாருக்கு வீடு, அரசுப் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.