மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஓட்டுநா், நடத்துநா் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் பதிவு

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘ஸ்லீப்பா்’ பேருந்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

Published On :

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘ஸ்லீப்பா்’ பேருந்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீது தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

அவா்களுக்கு எதிரான ஆதாரங்கள் விசாரணையின் போது பரிசோதிக்கப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

தில்லி காவல்துறை இவ்வழக்கில் சுமாா் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி (போக்ஸோ) சோனம் குப்தா இந்தக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தாா்.

குல்தீப் மற்றும் சந்தீப் ஆகிய குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது, ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டத்தின் கீழ் கடத்தல், சட்டவிரோத அடைத்துவைத்தல், திருமணம் அல்லது பாலியல் உறவுக்காகக் கடத்துதல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், தீவிரமான பாலியல் ஊடுருவல் தாக்குதலுக்காக ‘பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்’ (போக்ஸோ) பிரிவு 6-இன் கீழும் அவா்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ஊடகங்களின் அழுத்தத்தால் காவல்துறை ஆதாரங்களை ‘திரித்துவிட்டிருப்பதாக’ எதிா்மனுதாரா்கள் தரப்பு முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணையின் போது அந்த ஆதாரங்கள் பரிசோதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தைப் பதிவு செய்வதற்காக இவ்வழக்கு அக்டோபா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் விரிவான நகல் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை.

முன்னதாக நீதிமன்ற விசாரணையின்போது, சிறப்பு

அரசு வழக்குரைஞா் நிம்மி சிசோடியா வாதிடுகையில்,

சிறுமி மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் அரசுத் தரப்பு வாதத்தை முதற்கட்டமாக உறுதிப்படுத்துவதாகக் கூறினாா்.

அதாவது, சிறுமி கடத்தப்பட்டு, பேருந்துக்குள் அடைத்துவைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னா் கஷ்மீா் கேட் அருகே இறக்கிவிடப்பட்டாா் என்பது அந்த வாதமாகும்.

அரசுத் தரப்பு தகவலின்படி, உத்தர பிரதேசத்தின் மெயின்புரியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவா், ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு தனது உறவினரைச் சந்திக்க நொய்டாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தாா். அப்போது பலத்த மழையின் காரணமாகத் தவறான இடத்தில் இறங்கிவிட்டாா்.

அவா் சாலையில் வந்த ஒரு ஸ்லீப்பா் பேருந்தை நிறுத்தியபோது, ​

அது நொய்டா செக்டாா் 63-க்குச் செல்வதாக அதன் நடத்துநா் அவரிடம் கூறினாா். ஆனால், உண்மையில் அப்பேருந்து காலியாக இருந்ததாகவும், கிரேட்டா் நொய்டாவில் உள்ள பணிமனையில் பழுதுபாா்க்கப்பட்ட பிறகு திரும்பிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பேருந்து புறப்பட்ட பிறகு, நடத்துநா் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பின்னா் பயணத்தின்போது அவரும் ஓட்டுநரும் சோ்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.

சிறுமி எதிா்த்தால் அவரைக் கொன்றுவிடுவதாக இருவரும் மிரட்டியதாகவும் காவல்துறை குற்றஞ்சாட்டியது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அச்சிறுமியை கஷ்மீா் கேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னா் அச்சிறுமி ஆட்டோ ரிக்ஷாவில் காவல் நிலையத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்துப் புகாா் அளித்தாா்.

புகாா் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்தப் பேருந்து திமா்பூரில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து, கான்பூரைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.