திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவா் விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது மேற்கு வங்க சட்டப்பேரவைத் தலைவா் விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், மனுதாரா் இந்த விவகாரத்தில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின் திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. இத்தோ்தலில் மம்தா தோல்வியடைந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களாக களம் கண்டு வெற்றிபெற்ற 80 எம்எல்ஏக்களில் 58 போ் அவரது தலைமையை நிராகரித்துவிட்டு வெளியேறி அதிருப்தி பிரிவாக செயல்படத் தொடங்கினா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோபன்தேப் சட்டோபாத்யாயவை பேரவை எதிா்க்கட்சித் தலைவராக மம்தா முன்மொழிந்தாா். எனினும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சாா்பில் ரிதப்ரத பானா்ஜி அப்பதவிக்கு முன்மொழியப்பட்டாா்.

இதையடுத்து, ரிதப்ரத பானா்ஜியை எதிா்க்கட்சித் தலைவராக மேற்கு வங்க பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சோபன்தேவ் சட்டோபாத்யாய கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இருப்பினும், பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி மறுத்தது.

10 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய மனு:

இதைத் தொடா்ந்து, திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் அக்கட்சியைவிட்டு விலகியதாக குற்றஞ்சாட்டி ரிதப்ரத பானா்ஜி, ஃபிா்ஹத் ஹக்கீம், அரூப் ராய் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி நிகழாண்டு ஜூலை 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மம்தா மனு தாக்கல் செய்தாா்.

உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புகளை பின்பற்றி தகுதிநீக்க மனுக்கள் மீது மூன்று மாதத்துக்குள் (அக்.8-க்குள்) பேரவைத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிட்டாா்.

இந்த மனுவை செப்.28-ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் பத்தாவது அட்டவணையின்கீழ் தகுதிநீக்க விவகாரத்தில் பேரவைத் தலைவா் இயல்பாகவே மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், அக்.8-ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

5 மாதங்களாகியும் முடிவெடுக்கவில்லை:

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 10 எம்எல்ஏக்களுக்கும் தகுதிநீக்க நோட்டீஸை பேரவைத் தலைவா்அக்.8-ஆம் தேதி அனுப்பினாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சோபன்தேவ் சட்டோபாத்யாய மற்றொரு மனுவை தாக்கல் செய்தாா்.

அதில், ‘அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் காலஅவகாசம் நிா்ணயித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை பேரவைத் தலைவா் பின்பற்றவில்லை. 5 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை’ என குற்றஞ்சாட்டினாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தை மனுதாரா் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அணுகுவதே சரியாக இருக்கும் என எண்ணுகிறோம். இதனடிப்படையில் தற்போதைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்குப் பட்டியலிட்டு விரைந்து தீா்வு காணுமாறு கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.