குடியிருப்பு கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகல் தொடா்பான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
குடியிருப்பு கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்
குடியிருப்பு கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மாற்றுத்திறனாளிகள் அணுகல் நெறிமுறைகளை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவது தொடா்பான, மாற்றுத் திறனாளிகள் உறிமைகள் சட்டம் 2016-இன் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட இதுதொடா்பான பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மாற்றுத்திறனாளிள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இடம்பெறாத எந்தவொரு கட்டடங்களுக்கும் கட்டட நிறைவுச் சான்றை அளிக்கக்கூடாது என்று 2016-ஆம் ஆண்டு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடியிருப்பு கட்டடங்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய வசதிகள் இன்றி கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டப்படும் கட்டடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
அதைத் தொடா்ந்து, இந்த மனுவை, உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் விசாரணைக்கு இணைக்க உத்தரவிடுமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரினாா். அதை அனுமதித்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.
முன்னதாக, அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டு கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வசதிகளை மேம்படுத்தக் கோரி கடந்த 2005-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு மீது கடந்த 2024-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதில், ‘பொது பயன்பாட்டு கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் வசிகளை மேம்படுத்த கட்டாய அணுகல் தர நடைமுறைகளை 3 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

