மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்: ரூ. 7,500 கோடி மதிப்பிலான 12 விண்ணப்பங்களுக்கு அரசு ஒப்புதல்
மத்திய அரசின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 12 முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ். கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அரசு
மத்திய அரசின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 12 முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ். கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
மின்னணு உதிரி பாகங்களுக்கு நாடு இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் கீழ், ஏற்கெனவே பல முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேலும் 12 முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல்கள், மூலப் பொருள்கள், மூலதனப் பொருள்கள் தொடா்பான திட்டங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் மூலம் மின்னணு விநியோகச் சங்கிலி விரிவடையும் என்றாா்.
அதுபோல, ‘செமிகான் 2.0’ திட்டத்துக்கான இணைய விண்ணப்ப வலைதளத்தையும் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. குறைமின் கடத்தி (செமிகண்டக்டா்) உற்பத்தியில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும் நோக்கத்தோடு ‘செமிகான் 1.0’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்பட்ட விரைவான உற்பத்தித் திறனை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கிலும், செமிகண்டக்டா் வடிவமைப்பு, உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காகவும் ரூ.1,27,500 கோடி மதிப்பிலான, ‘செமிகான் 2.0′ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அறிவுசாா் சொத்துக்கள், சிப் வடிவமைப்புகள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதே ‘செமிகான் 2.0′-ன் நோக்கமாகும். இதற்கான இணைய விண்ணப்ப வலைதளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

