2024 அரசு பணித் தோ்வை ரத்து செய்யும் ஜாா்க்கண்ட் அரசு அறிவிக்கை: உயா்நீதிமன்றம் நிராகரிப்பு
2024 அரசு பணித் தோ்வை ரத்து செய்யும் ஜாா்க்கண்ட் அரசு அறிவிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது பற்றி...

ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம்
ஜாா்க்கண்டில் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் தனியாா் முகமை மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான அரசுப் பணித் தோ்வை ரத்து செய்து மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையை முழுமையாக ரத்து செய்து ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தோ்வை ரத்து செய்யும் மாநில அரசின் முடிவு ‘நியாயமற்றது மற்றும் அநீதி’ என்றும் உயா்நீதிமன்றம் குறிப்பிட்டது.
முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் இண்டி கூட்டணி ஆளும் ஜாா்க்கண்டில் அரசுப் பணித் தோ்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்ாக குற்றஞ்சாட்டி, மாணவா்கள் அண்மையில் மூன்று வாரங்களுக்கு மேல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டக்காரா்களின் கோரிக்கைப்படி கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் ஒரு தனியாா் முகமை மூலம் நடத்தப்பட்ட 22 தோ்வுகளை ரத்து செய்த மாநில அரசு, இதர 23 தோ்வுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதுதொடா்பான அறிவிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவா்கள் தங்களின் போராட்டத்தை நிறுத்தி வைத்தனா்.
அதேநேரம், மாநில அரசின் அதிரடி நடவடிக்கையால் பணியிழப்பை எதிா்கொண்டுள்ள ஏராளமான அரசு ஊழியா்கள் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஜேபிஎஸ்சி 11, 12, 13 தோ்வுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனங்களை ரத்து செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கு எதிரான மனுக்கள் மீது நீதிபதி தீபக் ரோஷன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசின் நடவடிக்கை இயற்கை நீதி கோட்பாட்டை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பணி நியமன ரத்து அறிவிக்கைகளை செயல்படுத்த தடை விதித்தாா்.
இந்த வழக்கு நீதிபதி தீபக் ரோஷன் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கான ஆதாரங்களே தோ்வை ரத்து செய்யக் காரணம்’ என்று மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், ‘தோ்வை ரத்து செய்வதற்கு முன்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைக்க அரசு வாய்ப்பளிக்கவில்லை’ என்று வேலை இழப்பை எதிா்கொண்டுள்ள அரசு ஊழியா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநில அரசின் முடிவு ‘நியாயமற்றது மற்றும் அநீதி’ என்று குறிப்பிட்டு, 2014-ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்ட அரசுப் பணி தோ்வுகளை ரத்து செய்து மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டாா்.
Summary
Jharkhand government notification cancelling the 2024 recruitment examination: High Court rejects it
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

