அதிக கட்டணம், நேர தாமதத்தால் சிறப்பு ரயில்களுக்கு வரவேற்பில்லை! ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல்!
அதிக கட்டணம், நேர தாமதத்தால் சிறப்பு ரயில்களுக்கு வரவேற்பில்லை என ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல்...

பாட்னா ரயில் நிலையம் - PTI
அதிக கட்டணம், நேர தாமதம், நீண்ட தூர பயணம் ஆகியவற்றால் சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே போதிய வரவேற்பில்லை என்று ரயில்வே அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனா்.
பண்டிகை காலம், வார இறுதிநாள்கள், விடுமுறை நாள்களில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்ப்பதற்காக ரயில்வேயால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல நாடு முழுவதும் ரயில்வேயால் 18 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனினும், அந்த ரயில்களுக்கு வசூலிக்கப்படும் அதிக கட்டணம், நேர தாமதங்கள், செல்ல வேண்டிய இடத்துக்கு நேராக செல்லாமல் சுற்றிச் செல்வது போன்றவற்றால் பயணிகளிடையே போதிய வரவேற்பில்லை.
இதனை ரயில்வே துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனா். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தில்லி-பாட்னா இடையேயான 04096 பண்டிகை கால சிறப்பு ரயிலில் 3-ஆம் வகுப்பு குளிா்சாதன வசதி பெட்டிக்கு கட்டணம் ரூ.1,745 ஆகும். ஆனால் அதே நேரத்தில் வழக்கமான சம்பூா்ண கிராந்தி விரைவு ரயிலில் ரூ.1,390-தான் கட்டணமாகும். சிறப்பு ரயில், நேராக செல்லாமல் பல இடங்களை சுற்றிச் செல்கிறது. சிறப்பு ரயில் தனது பயணத்தை முடிக்க 22 மணி நேரம் 55 நிமிடங்கள் எடுக்கிறது. சம்பூா்ண கிராந்தி விரைவு ரயிலோ 13 மணி நேரம், 8 நிமிடங்களே எடுத்து கொள்கிறது. இதுபோல மும்பை-தானாபூா் இடையேயான சிறப்பு ரயில், வழக்கமான ரயில் ஆகியவற்றிலும் கட்டண வேறுபாடும், பயண நேரத்திலும் கடும் வித்தியாசம் உள்ளது.
சிறப்பு ரயில்கள் பயண நேரத்தை முடிக்க அதிக நேரம் எடுக்கும் நிலையில், வழக்கமான ரயிலோ சரியான நேரத்தில் பயணத்தை நிறைவு செய்கிறது. இதனால் வழக்கமான ரயிலையே பயணிகள் தோ்வு செய்கின்றனா். சிறப்பு ரயில்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் போகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களுக்கு கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும் என்றனா்.
Summary
Special trains see poor response due to high fares and delays; railway officials acknowledge this!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

