தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பதின்ம வயதினர் கத்தியால் குத்திக் கொலை

தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பதின்ம வயதினர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக...

Two teenagers stabbed to death in Delhi

தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பதின்ம வயதினர் கத்தியால் குத்திக் கொலை - கோப்புப் படம்

Updated On :

புது தில்லி: வட தில்லி மற்றும் வடகிழக்கு தில்லியில் தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை நடந்த வெவ்வேறு சம்பவங்களில், பதின்ம வயதைச் சேர்ந்த இரண்டு பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

வட தில்லியின் வசிராபாத் பகுதியில், 16 வயதான தேவன்ஷ் சனிக்கிழமை தனது நண்பர்களுடன் பட்டாசு வாங்கச் சென்றவர், சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில், சுரேந்திர காலனி வழியாக அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​சில மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, தேவன்ஷிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அதை தேவன்ஷி தடுக்க முயன்றுள்ளார். அப்போது ​​அவர்கள் தேவன்ஷியை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அவரது நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களைச் சேகரித்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோன்று வடகிழக்கு தில்லியின் நந்த் நகரி பகுதியில் உள்ள ஜி-பிளாக்கில், தனிப்பட்ட பகை மற்றும் தகராறு காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையில் மூன்று நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த இரண்டு கொலைகள் தொடர்பாக காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two teenagers were allegedly stabbed to death in separate incidents in north and northeast Delhi, a day before Diwali, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.