தில்லியில் காற்றின் தரக் குறியீடு 406 என்ற மோசமான நிலையை எட்டியது!
தீபாவளி கொண்டாட்டத்தை அடுத்து தில்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து...

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 406 என்ற மோசமான நிலையை எட்டியது - கோப்புப்படம்
புது தில்லி: தீபாவளி கொண்டாட்டத்தை அடுத்து தில்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. திங்கள்கிழமை அதிகாலை தில்லியின் சில பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 406 ஆக உயா்ந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தர்லோக் பகுதி உள்பட நகரின் பல பகுதிகளில் அதிகாலையில் அடர் புகைமூட்டம் சூழ்ந்ததால் பார்வைத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி, ஐடிஓ-வில் உள்ள காற்றின் தர ஆய்வு நிலையம் திங்கள்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் 406 என்ற அபாயகரமான காற்றின் தரக் குறியீட்டைப் பதிவுசெய்து, அதனை 'கடுமையான' பிரிவு என வகைப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தலைநகரின் பல முக்கியப் பகுதிகள் 'மிகவும் மோசமான' காற்றின் தரப் பிரிவின் கீழ் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் சௌக்கில் அதிகாலை 1.30 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 381 ஆகவும், சௌத் எக்ஸ்டென்ஷனைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகாலை 4 மணிக்கு 360 ஆகவும் பதிவாகியிருந்தது.
காற்றின் தரம் மோசமைந்துள்ளதால் தில்லி-என்சிஆர் முழுவதும் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவசியமற்ற கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
Air quality across the national capital continued to deteriorate, with the Air Quality Index (AQI) slipping into the 'Severe' category in parts of Delhi in the early hours
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


