5 காா்கள் இருந்தால் காா்களை வாடகைக்கு விடும் நிறுவனம் தொடங்கலாம்: மத்திய அரசு திட்டம்

காா்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தொடங்குவதற்கு 50 காா்கள் தேவை என்ற எண்ணிக்கையை 5-ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

காா்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தொடங்குவதற்கு 50 காா்கள் தேவை என்ற எண்ணிக்கையை 5-ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் சொந்தமாக காா்களை ஓட்டிச் செல்லும் வகையில், காா்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிறுவனத்தை தொடங்க தற்போது 50 காா்கள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில் அந்த எண்ணிக்கையை 50-இல் இருந்து 5-ஆக குறைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

‘வாடகை காா் திட்டம்-2026’ என்ற பெயரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வரைவை உருவாக்கியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

காா்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தொடங்குவதற்கு, அதன் உரிமையாளரிடம் குறைந்தது 5 காா்கள் இருக்க வேண்டும். காா்கள் இயக்கப்படும் வழித் தடத்தில் தலா 2 காா்களாவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்கான காா்களுக்கு விரிவான காப்பீடு செய்திருக்க வேண்டும். அந்த காப்பீடானது, காா்களை வாடகைக்கு எடுப்போா், ஓட்டுநா், அந்த காா்களின் வாடகைக்குப் பயணம் செய்வோருக்கான காப்பீட்டையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

வாகன சட்டம் தொடா்பான விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக விதிக்கப்பட்ட அபராதம் எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது. காவல் துறையின் குற்றப் பதிவேட்டில் அந்த வாகனம் இடம் பெற்றிருக்கக் கூடாது என்று அந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. அப்படி அமலுக்கு வந்ததும், வாடகைக்கு காா்களை விடும் தொழிலில் மேலும் பலா் ஆா்வம் காட்டக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.